Local

சபாநாயகருக்கு எதிரான அராஜகம்: கடும் தண்டனை வழங்கவேண்டும்! – நாடாளுமன்றில் கூட்டமைப்பு வலியுறுத்து

சபாநாயகருக்கு எதிரான சபையில் இடம்பெற்ற அராஜகங்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மீது தாக்குதல்களை கடந்த 16ஆம் திகதி நடத்தியதை தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் மோசமான வார்த்தைகளையும் சபாநாயகர் மீது தொடுத்திருந்தனர். சபாநாயகர் மீது நடத்திய தாக்குதல்கள் எம்மை தலைக்குனியவைத்துள்ளன.

மிளகாய்த்தூள் நாடாளுமன்றில் விற்பனைக்கு உள்ளதா? என்றும் சிலர் கேட்கின்றனர். எனவே, சபாநாயகருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading