World

சமூக தொற்றாக மாறும் குரங்கு அம்மை எச்சரிக்கை விடுத்துள்ள நிறுவனம்!

இங்கிலாந்தில் குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக லேசான வைரஸ் நோய், மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பரவுவதாகவும், இது நெருங்கிய தொடர்பு மூலம் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே மாத ஆரம்பம் வரை, ஆபிரிக்காவிற்கு வெளியே தொற்றுகள் அரிதாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. 

தற்போதைய வெடிப்பு இங்கிலாந்தில் ஒரு நபரிடமிருந்து மற்றுமொரு நபருக்கு வைரஸ் பரவுவது முதல் முறையாகும், அங்கு ஒரு உள்ளூருக்கு இடையிலான பயண இணைப்புகள் அடையாளம் காணப்படவில்லை  இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

 இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுக்கு அமைய, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பெரும்பாலான தொற்றாளர்கள் லண்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதேவேளை, 111 தொற்றாளர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினம் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என கண்டறியப்பட்டுள்ளது.  

அறிகுறி தோன்றிய 21 நாட்களுக்குள் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அண்மைய வெளிநாட்டுப் பயணங்கள் 34 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading