Local

சம்பளம் வழங்க பணம் இல்லை அரசு தெரிவிப்பு?

அரச பொறியியல் சங்க ஊழியர்களின் இம்மாத சம்பளத்தை செலுத்த முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக கூட்டு பொறியியல் சேவைகள் ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

அதன்படி ,சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது பொறியியல் சங்க தலைவர் இதனை அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சங்க ஊழியர்களின் கடந்த இரு மாத சம்பளங்கள் நிதி அமைச்சகம் வழங்கிய சலுகையின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த மாதத்திற்கான சம்பளத்தை நிதி அமைச்சின் செயலாளர் மறுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ,சங்கத்தின ஏற்பாட்டாளர் துமிந்த நாகமுவ இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading