Cinema

சம்பளம் வாங்காமல் நடிக்கும் நடிகர் விஜய்!

பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். அண்மையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷாருக்கான் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான்.

இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளமே இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த காட்சிகள் ஒரேநாளில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading