Local

சர்ச்சைக்குரிய இரு தேசியப் பட்டியல்!

ஸ்ரீலங்காவின் 9ஆவது நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணிக்குக் கூடவுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வெற்றிடமாகவே இருக்கும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தின் 223 உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணையகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

எனினும் குறித்த இரு கட்சிகளும் தமது நாடாளுமன்ற தேசியப் பட்டியில் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும்போது இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஆசன ஒதுக்கீடு வெற்றிடமாகவே இருக்கும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை வழங்கப்படும் போது, மாலை வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading