Cinema

சல்மான்கான் படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு ரூபா 30 கோடி செலவு!

இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சல்மான்கான் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் கிஷி கா பாய் கிஷி கி ஜான் படம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் ஏற்கனவே சல்மான்கான் இந்தியில் நடித்துள்ள ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை படங்களின் தொடர்ச்சியாக டைகர் 3 படம் தயாராகி வருகிறது.

ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை படங்களில் நாயகியாக நடித்த கத்ரினா கைப் டைகர் 3 படத்திலும் சல்மான்கான் ஜோடியாக நடிக்கிறார். அதிரடி சண்டை கதையம்சத்தில் உருவாகும் இந்த படத்தை மனிஷ் சர்மா இயக்குகிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்துக்காக மும்பையில் சல்மான்கானின் பிரமாண்ட சண்டை காட்சியொன்றை படமாக்க உள்ளனர். அதில் ஷாருக்கானும் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.

இந்த ஒரு சண்டை காட்சிக்காக மட்டுமே தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா ரூ30 கோடி செலவு செய்கிறார். ஜெயில் அரங்கு பின்னணியில் இந்த சண்டை காட்சியை எடுக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading