Local

சவுதியில் அதிக சம்பளம் பெறும் இலங்கையர்கள்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமட் நாசர் அல்தாசம் அல்கதானியுடன் கலந்துரையாடினார்.

சவூதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களில் இலங்கையர்களும் உள்ளதாக சவூதி அரேபிய தூதுவர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​சவூதி அரேபியாவில் இந்நாட்டின் திறமையான தொழிலாளர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளதாக தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தொழில் பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் முன்மொழிந்ததாக சவூதி அரேபிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான எதிர்கால முதலீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபியா இந்த நாட்டுக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய சபாநாயகர், நட்புறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading