Local

சவுதி அரசு சூடானில் நிர்க்கதியான 8498 நபர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது!

சவுதி இராச்சியத்தின் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் சவுதி அரேபியா மேற்கொண்ட சூடானில் நிர்க்கதியானவர்களை  வெளியேற்றும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, 2023 மே 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூடானில் இருந்து மேலுமொரு குழுவினர் பாதுகாப்பாக ஜெட்டா நகரை வந்தடைந்தனர்.

இதில் 453 யேமன் மற்றும் சூடான் பிரஜைகள் HMS மூலம் ” அபா” மற்றும் எச் எம் எஸ் “ரியாத்”. ரோயல் சவுதி விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்களும் 31 சவூதி குடிமக்கள் மற்றும் 690 நாட்டவர்களுடன் (சூடான், லெபனான், இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கென்யா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா) ஜெட்டாவை வந்தடைந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் அவர்களுக்கு வழங்குவதில் சவுதி இராச்சியத்தின் ஆர்வத்தை வலியுறுத்தி, சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 278 சவுதி குடிமக்கள் உட்பட 110  நாடுகளைச் சேர்ந்த 8220 பேர்கள் மொத்தமாக 8498 நபர்களை சூடானில் இருந்து பாதுகாப்பாக சவுதி அரேபியா அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.

காலித் ஹமூத் அல்-கஹ்தானி
இலங்கை குடியரசின் சவுதி அரேபியாவின் தூதுவர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading