World

சவுதி அரேபியாவில் முதல் முறையாக திறக்கப்படவுள்ள மதுபான கடை!

சவுதி அரேபிய நாட்டின் முதல் மதுபான கடை விரைவில் திறக்கப்பட உள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விரைவில் நாட்டின் முதல் மதுபான கடை திறக்கப்பட இருப்பதாக அந்த நாட்டின் இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில் இந்த மதுபான கடை விரைவில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபான கடை சவுதி அரேபியா நாட்டின் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக திறக்கப்பட உள்ளது.

ஆனால் அந்த வெளிநாட்டினரும் மது பெற வேண்டும் மென்றால் நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று, மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபான கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் முதல் மதுபான விற்பனை இதுவாகும்.

இதற்கிடையில் நாட்டில் முதல் மதுபான கடையை திறக்கும் இளவரசர் முகமதுபின் சல்மான் இஸ்லாமிய சட்டத்தில் இருந்து விலகி செல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading