World

சவுதி இளவரசர் திடீர் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதி!

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் (86), திடீர் உடல்நலக் குறைவால் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக, அந்நாட்டு சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார் என்று மட்டுமே அந்த செய்தி நிறுவனத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மார்ச் மாதத்தில் அவரது இதயம் தொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading