World

சவூதியில் ஒரு வாரத்தில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சவூதியில் ஒரு வாரத்தில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

3 எத்தியோப்பியர்கள் உட்பட 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் ஒக்டோபர் 1 முதல் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 3ஆம் திகதி மக்கா மாகாணத்தில் முகமது பின் அக்ரம் பின் முகமது பட்கூக் என்ற சவூதி பிரஜைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

ஒக்டோபர் 5ஆம் திகதி அல்-ஜௌஃப் மாகாணத்தில் அப்துல்அசீஸ் பின் ரஃபான் பின் அவீத் அல்-அனஸி என்ற சவூதி பிரஜைக்கு கிஸாஸ் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் ஒரு பெண்ணை துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒக்டோபர் 7ஆம் திகதி அசீர் மாகாணத்தில் மூன்று எத்தியோப்பிய பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. Seni Redi Aqous Qorzqor, Shanafi Tekay Anbayeh Barah மற்றும் Mersu Negus Akalu Tele ஆகிய மூவரும் சவூதி அரேபியாவுக்குள் கஞ்சா கடத்திய குற்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்படி, ஒக்டோபர் 1 முதல் 7ஆம் திகதி வரை சவூதியில் 2 சவூதி பிரஜைகள் மற்றும் 3 எத்தியோப்பிய பிரஜைகள் என மொத்தம் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜை சிவராசா அனோஜன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அவருக்கு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், அவரது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading