Local

சவூதியில் மட்டுமல்ல இலங்கையிலும் சட்ட நடவடிக்கை உண்டு!

மத நிந்தனை குற்றத்திற்கு சவூதியில் மட்டுமல்ல இலங்கையிலும் சட்ட நடவடிக்கை உண்டு!

இப்போது அனோஜன் சமூக ஊடகத்தில் மத நிந்தனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சவூதி அரேபியாவில் தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அவருக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேல்முறையீட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து Social Media-வில் சில முஸ்லிம் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் புண்படுத்தும் வகையில் மத நம்பிக்கைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் ஒரு முக்கியமான விடயம்.

மத நிந்தனை என்பது சவூதி அரேபியாவில் மிகக்கடுமையான குற்றமாகக் கருதப்படும் அதே நேரம், இலங்கையிலும் சில வகையான மத அவமதிப்பு மற்றும் மத வெறுப்பைத் தூண்டும் செயல்கள் சட்டப்படி குற்றமாகலாம்.

இலங்கையில் சட்டம் என்ன சொல்கிறது?

1. அரசியலமைப்பு – Article 10, 12 & 14

ஒவ்வொருவருக்கும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுதந்திரம் உள்ளது. அதேபோல் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கருத்து மற்றும் பேச்சு சுதந்திரமும் உள்ளது. ஆனால் அது முழுமையான கட்டுப்பாடற்ற உரிமை அல்ல.

மத நல்லிணக்கம் மற்றும் பிறரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.

2. Penal Code – Section 291A

ஒருவரின் மத உணர்வுகளை காயப்படுத்தும் திட்டமிட்ட நோக்கத்துடன் வார்த்தைகள், ஒலி, சைகை அல்லது பொருள் மூலம் அவமதித்தால் குற்றமாகலாம்.

இதற்கு அதிகபட்சம் 1 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.

3. Penal Code – Section 291B

ஒரு மதப்பிரிவினரின் மத உணர்வுகளை திட்டமிட்டும் தீய நோக்கத்துடனும் புண்படுத்தும் வகையில், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகள் அல்லது காட்சிகள் மூலம் அந்த மதத்தையோ மத நம்பிக்கைகளையோ அவமதித்தால் குற்றமாகலாம்.

அதிகபட்சம் 2 வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.

இப்பிரிவுக்கு அமைவாக Facebook post, comment, meme, image போன்றவையும் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டப் பிரச்சினையாகலாம்.

4. ICCPR Act No. 56 of 2007 – Section 3

தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டி, அது:

discrimination, hostility, violence ஆகியவற்றிற்கு தூண்டுதலாக அமையும் வகையில் பிரசாரம் செய்வது குற்றமாகும்.

இவ்வாறான குற்றத்துக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வரை செல்லக்கூடியது.

5. Online Safety Act No. 9 of 2024 – Section 16

Online account அல்லது online location மூலம், திட்டமிட்ட மற்றும் தீய நோக்கத்துடன், ஒரு மதப்பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் false statement மூலம் அந்த மதத்தையோ அதன் நம்பிக்கைகளையோ அவமதித்தால் குற்றமாகலாம்.

இக்குற்றத்துக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.300,000 வரை அபராதம் அல்லது இரண்டும் கிடைக்கலாம்.

ஆனால் ஒரு முக்கியமான அவதானிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது.

ஒன்று, ஒரு மதத்தைப் பற்றி விமர்சிப்பது. மற்றையது, ஒரு மதத்தைச் சேர்ந்த மக்களிடம் வெறுப்பு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டுவது.

இரண்டும் ஒரே விடயம் அல்ல.

ஒருவருக்குப் பிடிக்காத மதக் கோட்பாட்டை சட்டபூர்வமாக விமர்சிப்பது ஒரு விடயம். ஆனால் ஒரு மத சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடுவது மிகவும் தீவிரமான சட்டப் பிரச்சினையாக மாறலாம்.

சமூக ஊடகப் பயனாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

உங்கள் மதத்தை மதிப்பது உங்கள் உரிமை. அதேபோல் மற்றவர்களின் மதத்தையும் மதிப்பது சமூகப் பொறுப்பு.

Facebook-ல் எழுதப்படும் உங்கள் வார்த்தைகளின் Screenshot போதுமானது உங்களுக்கு எதிராக வழக்கிட.

எனவே, மதத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் முன் சிந்தியுங்கள். மத நம்பிக்கையை விமர்சிக்கலாம்,
ஆனால் மத வெறுப்பைத் தூண்டாதீர்கள்.

மதம் வேறாக இருக்கலாம்.
சட்டம் அனைவருக்கும் ஒன்றே.

இறுதியாக, உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். தப்பு செய்தவன் தண்டிக்கப்படத்தான் வேண்டும். சட்டமும் தண்டனையும் மீண்டும் ஒரு முறை தவறு செய்யாமல் இருப்பதற்கே.

சட்ட விழிப்புணர்வுக்காக மட்டும்.

சமூக வலைத்தளத்தில் நகலெடுக்கப்பட்டது – A.M.சில்மி அஹமட்i

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading