Local

சவூதி மக்களின் இதயங்களை வென்ற இலங்கை பணியாளர்!

07 Sep 2021 சவூதி அரேபியாவின் நஜ்ரான் நகரில் உள்ள ஹோட்டலில் அறையொன்றை இலங்கை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்யும் போது, அங்கு தங்கம் நிரப்பப்பட்ட பையொன்றை மீண்டும் அதன் உரிமையாளரிடம் எடுத்துக் கொடுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை பணியாளரின் இந்த நேர்மையான செயலை அந்நாட்டு சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய ஆணைக்குழு (SCTNH) பாராட்டியுள்ளது.

மேலும், அந்தப் பையை மீண்டும் பெறுவதற்காக குறித்த ஹோட்டலுக்கு வந்த தங்கப் பையின் உரிமையாளர் இலங்கை பணியாளருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

வெளிநாட்டவர் ஒருவரின் நேர்மையான செயலைப் பாராட்டும் வகையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நேர்மையான மக்களின் நேர்மையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மக்கள் இத்தகைய நேர்மையான செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading