EntertainmentSports

சவ்ரவ் கங்குலி தம்பதியரின் சுவாரஸ்ய காதல் கதை!

தனது அபார கள செயல்பாடுகளுக்காக பரவலாக அறியப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தோனி தொடங்கி பலருக்கும் அணியில் வாய்ப்பு கொடுத்தவர். அண்மையில் ஐபிஎல் போட்டியின்போது விராட் கோலி உடன் பரஸ்பரம் கை கொடுத்துக் கொண்ட செயலுக்காக கங்குலி செய்திகளில் இடம் பெற்றார். இருந்தாலும் கோலி – அனுஷ்கா தம்பதியருக்கு இடையிலான காதல் கதையைக் காட்டிலும் சுவாரஸ்யமான காதல் கதைக்குச் சொந்தக்காரர் கங்குலி.

பொதுவாக காதலர்கள் தங்கள் வீட்டில் எதிர்கொள்ளும் தடைகள், சிரமங்கள் குறித்து சினிமாவில் கதையாக நாம் பார்த்திருப்போம். ஆனால், கங்குலி – டோனாவின் காதல் அதையும் கடந்தது. அது அனைத்தையும் எதிர்கொண்டு 25 ஆண்டு காலமாக மண வாழ்க்கையில் இந்த தம்பதியர் பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு.

கங்குலி – டோனா சந்திப்பு தொடங்கி மண வாழ்க்கையில் இணைந்தது வரையிலான சுவாரஸ்ய கதை…

கங்குலிக்கு டோனாவை பால்ய காலத்தில் இருந்தே தெரியுமாம். அவர்கள் இருவரும் பால்யகால நண்பர்கள். தனக்கு அப்போதிலிருந்தே டோனா மீது ஈர்ப்பு இருப்பதாக கங்குலியே ஒருமுறை சொல்லியுள்ளார்.

தன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடச் செல்லும்போது டோனாவின் வீட்டுப் பக்கமாக செல்வாராம். அப்படிப் போகும்போது டோனாவை பார்க்கலாம் என்பது அவரது திட்டம் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பாட்மிண்டன் ஷெட்டில் காக்கை டோனாவின் வீட்டில் போட்டுள்ளார். அதை எடுக்கச் செல்வது போல டோனாவுடன் பேசி, காதலை வளர்த்துள்ளார்.

ஒடிசி நடனக் கலைஞரான டோனாவை முதல்முறையாக உணவகம் அழைத்துச் சென்றுள்ளார் கங்குலி. சீன உணவுகளை வழங்கும் உணவகமாம் அது. அங்கு நிறைய உணவை ஆர்டர் செய்து, அனைத்தையும் கங்குலி உண்டதாக டோனா தெரிவித்துள்ளார். இருவரும் தீராக் காதலில் மூழ்கி இருந்த நேரம் அது. அப்போது லண்டனில் தனது முதல் டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க டோனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கங்குலி.

அவர்களது குடும்பத்தினருக்கு இடையே சிக்கல் இருந்துள்ளது. ஆனாலும் தங்கள் காதலில் இருவரும் தீர்க்கமாக இருந்துள்ளனர். வீட்டில் இருந்து காதலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கடந்து லண்டன் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் தனது நண்பர் வீட்டில் டோனாவை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார் கங்குலி. இருந்தும் இரு வீட்டாரின் சம்மதத்திற்காக நீண்ட காலம் தங்கள் திருமணத்தை மறைத்துள்ளனர். இறுதியில் கங்குலி – டோனா காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். தற்போது வாழ்வை இனிதாக வாழ்ந்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading