Cinema

சாதனைக்கு தயாராகிறது “லம்போ” “லம்போ”பாடல்!

நாம் வாழும் பூமியை நேசிக்கும் பாடல்கள் அவ்வப்போது உருவாகி வெளியாகி கேட்போர் மனங்களை வென்றுவிடும்.

இவ்வாறுதான் கோடிக் கணக்கானவர்களின் மனங்களை வென்றிருந்தது இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல்.

அதேபோல், காடு, மலை, பூமி, உயிர்கள் என அனைத்தையும் நேசிக்கும் ஒரு பாடலாக லம்போ லம்போ என்ற தனிப் பாடல் வெளியாகியிருக்கிறது.

மூ ராஜா (Moo Raja) என்பவரின் இயக்கம் மற்றும் வரிகளில் தாஜ்நூர் என்பவரின் இசையில் இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது.

நின்சி வின்சன்ட் பாடியுள்ள இந்தப் பாடலை ரி.பரிமளாதேவி என்பவர் தயாரித்துள்ள நிலையில் சரிகம தமிழ் யூடியூப் தளத்தில் பாடல் வெளியாகியிருக்கிறது.

பிரனிகா, விக்னேஸ், மித்ரா உள்ளிட்ட பலர் இந்தக் காணொளிப் பாடலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘லம்போ லம்போ’ பாடலும் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் போல் பட்டிதொட்டியெங்கும் கேட்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading