Local

சாய்ந்தமருது அல் – கமறூனில் நூறு சதவீதம் சித்தி!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2022இல் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/கமு/ அல் – கமறூன் வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 03 மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய 22 மாணவர்களும் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தி அடைந்துள்ளனர். இது இப்பாடசாலைக்குக் கிடைத்த பெருமையாகும். இதன் காரணமாக இப்பாடசாலை கோட்ட மட்டத்தில் முதலிடத்தில் வகிக்கின்றது.

அத்துடன் இப்பாடசாலையை சிறந்த முறையில் நெறிப்படுத்திச் செல்லும் அதிபர் எம். ஐ. நிபாயிஸ், இம்மாணவர்களுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்து கற்பித்த ஆசிரியர் ஏ. நஸ்ருதீன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் ஏ.எம்.எம்.றிபான், தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, புலமைப்பரிசில் தகைமை பெற்ற மாணவர்களான எம்.ஆர். சைஹான் ஷாதிர் (162), ஏ.பி. பாத்திமா றிபா பானு (143), எம்.ஏ. ஷஃறா (147) ஆகியோருக்கும் பெற்றார் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading