Local

சிங்கள குடும்பத்திற்கு முஸ்லிம் குடும்பம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

வறுமையான சிங்கள குடும்பம் ஒன்றிற்காக முஸ்லிம் குடும்பம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தங்குவதற்கு வீடு ஒன்று இல்லாமல் சிரமப்பட்ட குடும்பம் ஒன்றிற்காக முஸ்லிம் குடும்பத்தினர் வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான முழுமையான செலவை ஏற்றுள்ளனர்.

ரிப்கி மர்சுக் என்பவரும் அவரது குடும்பத்தினருமே இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளதாக புத்தியாகம தம்மசேன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான விடயங்களை தெரிவித்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “முஸ்லிம் மதத்தவரான ரிப்கி மரசுப் குடும்பத்தினரின் உதவியுடன் சிங்கள குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளது.

கடவுளின் ஆசிர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இனவாத முரண்பாடுகள் காணப்பட்ட போதும் இவ்வாறான செயற்பாடுகள் அவற்றை இல்லாமல் செய்வதாக சிங்கள மக்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading