Cinema

சினிமா துணை நடிகை தற்கொலை! தங்கியிருந்த உறவினர் மாயம்

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் சினிமா துணை நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதாகும் பத்மஜா என்ற நடிகை காலடிப்பேட்டை சன்னதி தெரிவில் வீடு வாடகைக்கு எடுக்கு வசித்து வந்தார்.
இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு இரண்டு வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
இதனையடுத்து பத்மஜா தனது மகனை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு திருவொற்றியூரில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் தனது வீட்டில் பத்மஜா தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பத்மஜா பெங்களூருவில் உள்ள தனது அக்காவுக்கு அழுதபடியே வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி அழுதிருக்கிறார்.
அந்த வீடியோவை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்மஜாவுடன் அவரது உறவினர் ஒருவர் தங்கியிருந்தாக தெரிகிறது. ஆனால் பத்மஜா தற்கொலை செய்து கொண்ட பின்னர் அந்த உறவினர் அங்கு இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பத்மஜா உடன் தங்கியிருந்த உறவினர் யார், வீடியோ அனுப்பியதற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading