Sports

சிம்பாப்வே அணியிடம் தோற்றது இலங்கை!

இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.அவ்வணி சார்பில் சிகந்தர் ரஷா 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இதற்கமைய, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 280 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தசுன் சானக்க 102 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.சர்வதேச ஒருநாள் போட்டியில் அவரது முதலாவது சதம் இதுவாகும்.குசல் மெந்திஸ் 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் டென்டை சடாரா மற்றும் பிளீசிங் முசரபானி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.அதன்படி, இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading