Local

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா காலமானார்!

சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா  திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம்  இயற்கை எய்தினார்.

இவர் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான  K.V. தவராசாவின் மனைவியான இவர் குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தார். 

நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளில் கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சவால்மிக்க பல வழக்குகள் தொடர்பில் இவர் ஆஜரானதுடன் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இவர் அறியப்படுகின்றார். 

இவர் இறுதியாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சார்பாக வழக்கில் வாதாடி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading