Local

சிறுமி கத்தியதால் சேற்றுக்குள் அமுக்கி கொலை செய்தேன்!

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.

இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு பிரிவுகளில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனாஸாவாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் உடல் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இன்று பிரதே பரிசசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading