Local

தந்தையின் ஐஸ் போதைப்பொருள் நண்பரே சிறுமியை கொலை செய்துள்ளார்!

நாட்டையே உலுக்கிய அட்டுழுகம பிரதேச 9 வயது சிறுமியின் கொலை தொடர்பில் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்து போகும் ஐஸ்நண்பர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய சந்தேக நபர் தானே இக்கொடூரமான கொலையை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனை செய்து வந்துள்ளதுடன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வருகை தந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​குறித்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் நின்றிருக்கிறான் என்பதை அங்கு பதிவான கமெரா காட்சிகள் பல வெளிப்படுத்துகின்றன.

இதேவேளை கறிவாங்க சென்ற சிறுமி வீதியில் நிற்பதை கண்ட ஒரு பெண் “தனியாக இங்கே ஏன் நிற்கிறாய்” என்று வினவியபோது “தந்தைக்காக காத்திருக்கிறேன்” என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது இவ்வாறிருக்கையில் சிறுமி கோழி வாங்குவதற்கு கடைக்கு சென்று திரும்பாத நிலையிலும் அங்கு கோழிக்கறி சமைக்கப்பட்டிருந்ததாகவும், காலையில் காணாமல்போன பிள்ளை தொடர்பில் பிற்பகல் 2 மணியின் பின்னரே முறைப்பாடு செய்ய சென்றதாகவும் பிரதேசவாசிகளிடையே தற்போது பேச்சுக்கள் இடம்பெறுவதை அங்கிருந்து பரவும் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கிறது!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading