World

சிறு விமானம் வீதியில் வீழ்ந்ததில் அறுவர் பலி!

ஹெய்டி தலைநகர் போர்ட் அயு பிரின்ஸின் பிரதான வீதி ஒன்றில் சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகரில் இருந்து தென்கிழக்கு துறைமுக நகரான ஜக்மேலுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தரையில் இருந்த பலரும் காயம் அடைந்துள்ளனர்.

விமான ஓட்டி ஆரம்பத்தில் உயிர் தப்பி இருந்தபோதும் மருத்துவமனையில் பின்னர் உயிரிழந்துள்ளார். இயந்திரக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களில் உதவி கோரி அழைப்பு விடுத்திருந்ததாக ஹெய்டி சிவில் விமான அதிகாரசபை குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading