Cinema

சிவகார்த்திகேயன் உட்பட 42 பேருக்கு கலைமாமணி விருதுகள்!

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது இந்தாண்டு நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

சீரியல் நடிகர்களான நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காதல் மதி, வசனகர்த்தா வி.பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading