Local

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற பத்து இலட்சம் முகக்கவசங்கள்

சீனாவில் வுகான் நகரிலிருந்து கொரோனா பரவி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பரவியதும், கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘சீன வைரஸ்’ என்று அழைத்தார்.

சீனா கொரோனா குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அவரை அடுத்து அமெரிக்க எம்.பி.க்களும் குற்றம் சுமத்தினர்.
இந்த நிலையில் நேற்று சீனாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள மாசூசெட்ஸ் மாகாணத்திற்கு பத்து லட்சம் முகக்கவசங்களை ஏற்றிக் கொண்டு சீனாவிலிருந்து தனி விமானம் வந்து இறங்கியது.

அவற்றை ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டு அங்கேயே செய்தியாளர்களையும் சந்தித்தார் அந்த மாகாண கவர்னர் சார்லி பாக்கர்.

நேற்று குற்றச்சாட்டு; இன்று இறக்குமதி!

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading