Local

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோன!

சீனாவில் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது.

இதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

சீனாவின் துணைப் பிரதமர் சன் சுன்லன் “தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு” அழைப்பு விடுத்துள்ளார்.

சந்தை மூடப்பட்டது. அதைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

“பீஜிங் ஒரு அசாதாரண காலத்திற்குள் நுழைந்துள்ளது” என்று நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் தெரிவித்து உள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading