Local

சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 19,000 மெட்றிக் தொன் சீனி தற்போதும் நாட்டில் இருப்பதாகவும் அதனால் சீனி தட்டுப்பாடு அல்லது தேவையற்ற விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சீனி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகளை நுகர்வோர் சேவை அதிகார சபை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சீனியை சரியான விலையில் கொள்வனவு செய்து தேவையற்ற சீனி தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, பொதுமக்களினதும் பொறுப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டியது மக்களின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading