Local

சீமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல்!

நாட்டில் சீமெந்து தேவை அதிகரித்துள்ளதாக சீமெந்து  இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர் பற்றாக்குறையினால் சீமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை 2 இலட்சம் சீமெந்து  பொதிகளுடனான கப்பலொன்று நாளை  நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சீமெந்து நிறுவனம்  ஊடாக நாட்டில் மாதாந்தம் 2 லட்சத்து 30 ஆயிரம்  மெட்ரிக் டொன் சீமெந்து  உற்பத்தி செய்யப்படுவதுடன்  மேலும் 2 லட்சம்  மெட்ரிக் டொன்  இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  தற்போது டொலர் நெருக்கடி காரணமாக , சீமெந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தில்  தேங்கியுள்ள  பொருட்களை விடுவிப்பது தொடர்பில்  நாளைய தினம்  வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading