Local

சீரற்ற காலநிலையால் வைரஸ் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வைரஸ் காய்ச்சல் கணிசமானளவு அதிகரிக்கலாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது இந்நிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்களுக்கான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, கடும் மழையுடன் கூடிய காலநிலை , வெள்ளப்பெருக்கு போன்றவற்றின் போது குழந்தைகள் மற்றும் நலிவடைந்தோர் மத்தியில் விரைவில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சலை அதிகரிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading