Uncategorized

சுகாதார அமைச்சர் பதவிக்கு ராஜித?

தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் நாட்டை துரதிஷ்டமான நிலையில் இருந்து மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உணவளிக்க வேண்டுமே தவிர தேர்தல் அல்ல என்றும் கூறிய ராஜித சேனாரத்ன, எந்த அரசாங்கம் அமைச்சர்களை நியமித்தாலும் அவர்கள் அதனை தொடர்ந்தும் செய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நேற்று (02) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading