சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்
மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொது மக்களை எச்சரித்துள்ளது.
சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் பணம் கோரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு, பல்வேறு காரணங்களைக் கூறி இந்த மோசடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நபர்களின் நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் அத்தகைய கோரிக்கை பெறப்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்க வேண்டும் என்று சுங்கத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You must be logged in to post a comment.