Local

சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையரை கடைசியாக நேருக்கு நேர் சந்தித்தவரின் பகிர் அனுபவம்!

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையரை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்வதற்கு சில நொடிகளுக்கு முன்பாக தான் கம்பை கொண்டு அவரை எதிர் கொண்டதாக இளைஞர் ஒருவர் தகவல் பரிமாறியுள்ளார்.

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொது மக்களின் மீது கத்தியைக் கொண்டு கொலைவெறித் தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட்டிலிருந்த அமித் தந்த் என்னும் இளைஞர் காவல்துறை அதிகாரிகள் அவரை சுட்டுக் கொள்வதற்கு முன்பாக தான் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையரை கம்பை கொண்டு எதிர் கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அமித் கூறியதாவது, இலங்கையர் கத்தியைக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டிளிருந்த பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய உடனே அங்கிருந்து அனைவரும் கலைந்து ஓடினார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த இலங்கையர் கத்தியை கொண்டு ஒருவரிடம் செல்லும்போது அவர் அல்லாஹ் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அந்த இலங்கையரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் 5 முறை துப்பாக்கியை கொண்டு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading