CinemaWorld

சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் தமிழ்ப்பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகார்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் இலங்கை பெண் புகார் கொடுத்ததன் முழு பின்னணி வெளியாகியுள்ளது.

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் அந்தகன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

அவர் தரப்பில் பிரசாந்த் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாக வாய்மொழி புகார் ஒன்று சென்னை, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரசாந்த் தரப்பில், குமுதினி தனது புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஈடுபட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் குமுதினி தரப்பில் புகார் தொடர்பாக எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading