Cinema

சூப்பர் ஹீரோவாக களமிறங்கும் மஹேந்திர சிங் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதர்வா : தி ஒரிஜின் என்ற கிராபிக் நாவலில் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் அதர்வா : தி ஒரிஜின் என்ற கிராபிக் நாவலை எழுதி வருகிறார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த கிராஃபிக் நாவலின் நாயகனாக அதர்வா என்ற சூப்பர் ஹீரோவாக இந்திய கிரிக்கெட் வீரரான தோனி தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கான மோஷன் போஸ்டரை தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தோனியின் இந்த புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காமிக்ஸ் விரைவில் அமோசன் தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading