Local

சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றது!

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பெதும் நிஸங்க 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப்பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 172 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக Andrew Balbirnie 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading