World

சூரியனை விட 5 மடங்கு வெப்பம் கொண்ட சூரியனை உருவாக்கி சீனா சாதனை!

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பம் கொண்ட செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது சீனா

சீனா உருவாக்கியுள் செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தகித்தது

மேலும் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது.

சீனா உருவாக்கியுள்ள செயற்கை சூரியனின் வெப்பமானது, சூரியனை

விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது.

சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது.இது பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது.

சீனா கடந்த 1999ம் ஆண்டிலிருந்து ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை

சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, 70 லட்சம் கோடி ரூபாய்

வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை

மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது.

இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு

முன் 7 கோடி டிகிரி செல்சியசில் வெப்பத்தை உருவாக்கினார். இது சூரியனை விட 5 மடங்கு
அதிக வெப்பமாகும்.

17நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. மாசு ஏற்படாத வகையில்

சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்திற்கு உலகளவில் பாரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது

அதே நேரம், சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும்

வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய
அதே விஞ்ஞானிகள் பிரான்ஸ் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

இதற்கு, ‘இட்டர்’ என பிரான்ஸ் பெயரிட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading