World

சூரிய குளியல் போட்ட பெண்ணுக்கு,பிளாஸ்டிக் போல் சுருங்கிய நெற்றி!

பல்கேரிய கடற்கரையில் சூரிய குளியல் போட்ட இளம்பெண் ஒருவரின் நெற்றி உருகி, பிளாஸ்டிக் போல மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐரோப்பிய நாடான பிரித்தானியாவை சேர்ந்தவர் சிரின் முராத் (25). அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பல்கேரிய கடற்கரையில், முகத்திற்கு எவ்வித சன்ஸ்கிரீம் போடாமல், அரைமணி நேரம் சூரிய ஒளியில் படுத்து உறங்கியுள்ளார். எழுந்து பார்த்த போது நெற்றியில் சிறிய புண் மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து, 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அருகிலிருந்த நீச்சல்குளத்தில் குளித்துள்ளார்.

அதற்கு அடுத்த நாள் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சன்ஸ்கீரின் போடாமல் இருந்ததால், நெற்றி ஏறக்குறைய பிளாஸ்டிக் போல மாறியிருந்துள்ளது. மிகுந்த வலியும் இருந்தும் உடனடியாக மருத்துவ முதலுதவிக்கு செல்லாத அவர், தனது குடும்பத்தினரிடம் நடந்ததை கூறியுள்ளார். இது நிலைமையை அதைவிட மேலும் மோசமாக்கி உள்ளது.

சிரின் கூறுகையில்,” அடுத்த நாள் மிகவும் வலி எடுத்தது. ஆனால் அது உரிய தொடங்கியபோது எனக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைத்தது. அப்போது வலி இல்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். வித்தியாசமாக தோல் இப்போது நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டதை போல முன்பை விட நன்றாக உணர்கிறேன்” என்றார்.

நெற்றியில் உள்ள தோல் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் உரிய தொடங்கிய போது பிங்க் நிறத்தில் தோல் மாற துவங்கியுள்ளது. சருமம் உரிய தொடங்கியபோது சிறிது நிவாரணம் கிடைத்துள்ளது. இயல்பான தோற்றத்தை அடைய ஏழு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. இப்போது சிரினின் கன்னங்கள் மற்றும் கண்களுக்கு கீழ் பகுதியில் நிறமாற்றங்கள் மட்டுமே உள்ளன.

சூரிய ஒளியில் நேரடியாக நிற்கும் சூழல் வந்தால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம். இது புறஊதா கதிர்களில் இருந்து முகத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், சுருக்கங்கள், தேவையற்ற நிறமி உள்ளிட்ட சரும பாதிப்புகளையும் தடுப்பதால் பரிந்துரைக்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading