Sports

சென்னை அணியை வென்றது ராஜஸ்தான் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட சென்னை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ருதுராஜ் 101 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

அதேபோல், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஜடேஜா 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ராகுல் டெவாட்டியா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 21 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதேபோல், ஷிவம் துபே அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading