Local

செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் ராஜபக்சவின் பெயர்?

 

இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு சேமிக்கப்பட்டிருக்கும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிரித்தப் படியே பதிலளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செவ்வந்தியின் தொலைபேசியை ஆய்வு செய்தவர்களிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும்.

செவ்வந்தியின் தொலைபேசியை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர் போல்தான் தெரிகின்றது.

அவ்வாறானவர்கள் ஆய்வு செய்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மகே ராஜபக்ஷ(எனது ராஜபக்ஷ) என்ற பெயரொன்று தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் மகிந்த ஜயசிங்க கூறியமை தொடர்பில் நாமலிடம் வினவப்பட்டபோது, இதற்கு பதிலளித்த அவர்,

“சிலருக்கு தற்போது ராஜபக்ஷக்கள்தான் கனவில் கூட வருகின்றனர். “எனது ராஜபக்ஷ” “எனது நாமல்” என நினைத்து கொண்டு கனவில் இருந்து எழுந்தார்களா என எனக்கு தெரியவில்லை . அவர்களிடம் தான் கேட்க வேண்டும் கனவில் வந்தது எந்த ராஜபக்ஷ என்று. அவர்களுடைய கட்சியிலும் நாமல் என ஒருவர் இருக்கிறார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை. நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம். பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால்தான் எனது என எழுதி சேமித்து வைப்பார்கள் . சிலவேளை அது அப்படி சேமித்து வைக்கப்பட்ட ஒரு பெயராகக்கூட இருக்கலாம்”

என நாமல் பதிலளித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading