பத்மே உடன் தொடர்பிலிருந்த நடிகைகள் யார்?
பிரபல மொடல் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு பின், இன்னும் பல இலங்கை பிரபலங்கள் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு (CID) அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஹல்பத்தர பத்மே எனப்படும் பாதாள உலகத் தலைவருடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்பைச் சுற்றி பியூமி மீது விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பத்மேவின் கைப்பேசியில் இருந்த சில புகைப்படங்களின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பேரில் பியூமி இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் CID அலுவலகத்தில் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில், 2022ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தான் பத்மேவை சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னை “வெள்ளையாக ஆக்கும் கிறீம்” பற்றிக் கேட்டதாகவும், அதன் பிறகு ஒரு புகைப்படம் எடுத்ததாகவும் பியூமி விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, பத்மேவின் கைப்பேசிகளில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில் பல பிரபலமான நடிகைகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் CID அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You must be logged in to post a comment.