Sports

சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட பெண்

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் நடைபெற்ற மாரத்தானில், சேலை அணிந்தபடி கலந்துகொண்ட இந்தியப் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய பெண்
இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினரான Madhusmita Jena Das (41), மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மாரத்தானில் கலந்துகொண்டார்.

எல்லாரும் அரைக்கால் சட்டையுடன் ஓடிக்கொண்டிருக்க, நான்கு மணி 50 நிமிடங்கள், அவர் சேலை அணிந்து ஓடி ஓட்டப்பந்தயத்தை முடித்தார்.

அவர் ஓடிய தூரம் 42.5 கிலோமீற்றர்கள். சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட Madhusmitaவுக்கு இணையவாசிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading