சைக்கிள்களுக்கும் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

விபத்து ஏற்பட்டால் ரூ.ஒரு இலட்சமும், சைக்கிள் முற்றாக சேதமடைந்தால், சைக்கிளின் முழு மதிப்பையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி நிறுவனங்கள் சைக்கிள்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டால் தற்போது சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வருட காலத்திற்குள் வாங்கும் சைக்கிள்களுக்கு இந்த காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டால் ரூ.ஒரு இலட்சமும், விபத்தில் சைக்கிள் முற்றாக சேதமடைந்தால், அந்த சைக்கிளின் முழு மதிப்பையும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
