Cinema

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த Vj பிரியங்கா!

பிரியங்கா அவருடைய காதல் கணவர் வசி பற்றிய பேசிய விடயங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே அண்மையில் வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட விடயம் அனைவரும் அறிந்ததே.

அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பிரியங்கா முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

அதன் பின்னர் வசி என்பவரை திடீரென இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா! | Vj Priyanka About His Husband Family Background

திருமணத்துக்கு முன்னர் இருப்பதை விட அப்போது மிகவும் அழகாக தோன்றுகின்றார். தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளும் பெருமளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

என்னுடைய கணவர் யார் தெரியுமா?

இந்நிலையில் தற்போது பிரியங்கா தேஷ்பாண்டேவின் தனது கணவர் வசி சாச்சி யார் என்று பகிர்ந்து கொண்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காதல் கணவர் குறித்து பேசிய பிரியங்கா, “ திருமணம் முடிந்த பின்னர் சில சமூக வலைத்தளங்களில் பிரியங்கா கணவர் சாதாரண ஆள் கிடையாது, தீவு வாங்கி கொடுத்திருக்கிறார், 200 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது, அவருடைய குடும்பத்தினர் அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் என பல பதிவுகளை பார்த்தேன்.

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா! | Vj Priyanka About His Husband Family Background

அவையெல்லாம் உண்மை கிடையாது, என்னுடைய கணவர் வசி இலங்கை தமிழர். தற்போது அவருடைய குடும்பத்தினருடன் லண்டனில் வசிக்கிறார். அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். பணத்திற்காக திருமணம் செய்து கொண்டேன் என்கிறார்கள். இவ்வளவு காலமாக தொலைக்காட்சியில் உழைக்கிறேன், என்னிடம் பணம் இருக்காதா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading