World

சொந்த மகனை கொன்று, எரித்த பெற்றோர்!

மதுரை அருகே இளைஞர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்ற தாய், தந்தையே கைதாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி கிருஷ்ணவேணி. இந்தத் தம்பதியினருக்கு மணிமாறன் என்ற மகன் இருக்கிறார். மணிமாறனுக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியைப் பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிமாறன் வைகை கரையோரம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் மணிமாறன் தினமும் மது அருந்திவிட்டு தனது தாய் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது கொடுமையைத் தாங்க முடியாத முருகேசன் கிருஷ்ணவேணி யும் சேர்ந்து மணிமாறனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், கொலை செய்த பின்னர் மணிமாறன் உடலை துணியால் கட்டி சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று வைகை நதிக்கரையில் தீயிட்டு எரித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சைக்கிளில் தனது மகனின் உடலை எடுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் அடிப்படையில் தாய், தந்தை இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading