Local

ஒமிக்ரோன் வைரஸ் 21 மணிநேரம் உயிர்வாழும் ஆய்வில் தகவல்!

உலகளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரசின் புதிய உருமாற்றமான ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரம் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஒமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.

ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

 குறித்த ஆய்வில், ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.

கோவிட் வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, ஆல்பா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும், ஒமிக்ரோன் 191.3 மணி நேரம் வாழும் என்றும் தெரியவந்துள்ளது.

ஒமிக்ரோன் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிர்வாழ்கின்ற போது, ஆல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading