Local

சொரணாதொட்ட வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சொரணாதொட்ட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (21) இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், ஒரு வாக்கினால் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்தது.

இதேவேளை, இன்றைய வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சபையில் எதிர்க்கட்சிக்கு 10 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்திக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர்.

இதற்கிடையில், இன்று சொரணாதொட்ட பிரதேச சபையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு வாக்கெடுப்பிலும், தேசிய மக்கள் சக்தி மூன்று வாக்குகளால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading