Local

ஜகத் குமாரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சரத் வீரசேகர கோரிக்கை!

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எடுத்துமூலம்  கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப் போவதில்லை என கட்சியின் தலைமைத்துவம் உறுதிப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவிக்கின்றார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

இதன்படி, தன்னைப் போன்று கீழ் மட்டத்தில் இருந்து முன்னோக்கி வந்த நபர்களை, சில அரசியல்வாதிகள் கூட்டாக இணைந்து தாக்க  முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading