Local

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் பந்துல!

எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என, முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு இடமளிக்கும் அமைச்சரவையின் பொறுப்பை ஏற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்துக்கு சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க ஆலோசித்துள்ள அவர், நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தவுடன் மற்றுமொரு அமைச்சரவையை நியமிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading