ஜனாதிபதி அநுரவை பாதுகாக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை!!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இராணுவத்தின் SF பிரிவு ஒன்று இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்காக அந்த பிரிவிற்கு விசேட பயிற்சி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வரையில் அந்த பிரிவிற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் ஜனாதிபதி பாதுகாப்பிற்காக உள்ள STF உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு மேலதிகமாக இந்த இராணுவத்தின் SF பிரிவு ஈடுபடுத்தப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

You must be logged in to post a comment.