Local

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஜனாதிபதி கோட்டாபய

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (25) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியம் வழங்கியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளராக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள வெள்ளைவேன் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடையதாக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து சாட்சியம் வழங்கவே ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும், முன்னாள் கடற்படை ஊடக பேச்சாளர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்கவும்  நேற்று குறித்த ஆணைக்குழு  முன் சாட்சியங்களை வழங்கியுள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜனக் டி சில்வா ஆணைக்குழுவின் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading